பிரான்சில் நிலவும் மோசமான பிரச்சினை: ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், நிலவும் மோசமான பிரச்சினை ஒன்று தொடர்பில் அவசர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அது என்ன பிரச்சினை?
உலகமெங்கும் உள்ள அழகிகள் வந்து பூனை நடைபோடும் ஃபேஷன் ஷோக்கள் நடைபெறும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், மூட்டைப்பூச்சித் தொல்லையாம்!
சமீப காலமாக வீடுகள், மருத்துவமனைகள், ரயில்கள், திரையரங்குகள் முதலான இடங்களில் மூட்டைப்பூச்சித் தொல்லை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
REUTERS/Stephanie Lecocq
சமீபத்தில் பாரீஸிலுள்ள திரையரங்கம் ஒன்றிற்கு சென்று மூட்டைப்பூச்சிகளிடம் கடிபட்ட ஒருவர், அது குறித்த புகைப்படங்களை எக்ஸில் வெளியிட்டிருந்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் இந்த மூட்டைப்பூச்சித் தொல்லையை தீர்க்க அவசரமாக நடவடிக்கை எடுக்குமாறு, நகர அதிகாரிகள் அரசுக்கு அவசர கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |