பிரான்ஸ் தூதருக்கு அடி உதை... ஈரான் மீது குற்றச்சாட்டு
பிரான்ஸ் தூதரக அதிகாரி ஒருவர் ஈரான் அதிகாரிகளால் அடித்து உதைக்கப்பட்டதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பிரான்ஸ் தூதருக்கு அடி உதை...
பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் இருவர் ஈரானில் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும், அவர்களில் ஒருவருக்கு அடியும் உதையும் விழுந்ததாகவும் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜீன் நோயல் பாரட் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு, ஈரான் அதிகாரிகள், பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் இருவரை காரணமின்றி கைது செய்து பல மணி நேரம் விசாரணைக்குட்படுத்தியதாகவும், பின்னர் அவர்கள் தூதரகம் திரும்பியதாகவும் தெரிவித்துள்ள ஜீன், தற்போது அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும், விரைவில் பிரான்ஸ் திரும்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சரான அப்பாஸ் அராக்சியை தான் சந்தித்ததாக தெரிவித்துள்ள ஜீன், தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகள் நடத்தப்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளத்தகாதது என்றும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்வதாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |