அதிக கதிர்வீச்சை வெளியிடும் ஐபோன் 12 மாடல்: பிரான்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆப்பிள் மறுப்பு
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மாடல் கதிர்வீச்சை அதிக அளவு வெளியிடுவதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்
கடந்த 2007ம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனமானது தங்களது ஐ போன் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
ஸ்மார்ட்போன் சந்தையில் வெறும் 15 சதவீத பங்கை கொண்டுள்ள ஐபோன், உலக அளவில் ஸ்மார்ட்போன் வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம் ஈட்டி வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வெளியான ஐபோன் 15 முதல் முறையாக யுஎஸ்பி-சி டைப் சார்ஜிங் போர்ட் வசதியுடன் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பிரான்ஸ் குற்றச்சாட்டு இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கதிர்வீச்சை வெளியிடுவதாக பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதனால் நாட்டில் ஐபோன் 12 மாடல் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸின் தேசிய ஃப்ரிக்வென்சி முகமை (AFNR) தெரிவித்துள்ள இந்த புகாரின் அடிப்படையில், 2 வாரத்திற்குள் மென்பொருள் அப்டேட் செய்து கதிர்வீச்சு அளவை குறைக்க வில்லை என்றால் புழக்கத்தில் உள்ள ஐபோன் 12 சீரிஸ் போன்களை திரும்ப பெற உத்தரவு பிறப்பிக்கப்படும் என அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் தெரிவித்துள்ளார்.
மறுப்பு தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனம்
ஐபோன் 12-ன் கதிர்வீச்சு இயக்கம் தரநிலை கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு இருபதாக ஆப்பிள் நிறுவனம் உலக நாடுகளின் முகமையை சுட்டிக் காட்டி தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்ட பரிசோதனைகளில் இருந்து தாங்கள் மேற்கொண்ட பரிசோதனை முற்றிலும் மாறானது என பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |