அமெரிக்கா உடனான பிரச்சனை ‘சீரியஸாக’ இருக்கிறது! வெளிப்படையாக கூறிய பிரான்ஸ்
அமெரிக்கா-பிரான்ஸ் இடையே நிலவும் பிரச்சனையின் நிலவரம் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Yves Le Drian தகவல் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சீனாவுக்கு எதிராக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய இடையே ஏற்பட்ட AUKUS ஒப்பந்நதம் ஏற்பட்டது.
AUKUS ஒப்பந்த்தின் கீழ் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க உறுதியளித்த ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உடனான பல பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
தங்களுக்கு எந்தவித முன்னறிவிப்போ தகவலோ தெரிவிக்காமல் AUKUS ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறிய பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான அதன் தூதர்களை திரும்ப அழைத்தது.
இதனையடுத்து, பிரான்ஸ் ஜனாதிபதி மாக்ரோன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இடையேயான தொலைபேசி உரையாடலை தொடர்ந்து அமெரிக்காவுக்கு பிரான்ஸ் தூதர் அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், பிரான்ஸ் எம்.பி-க்கள் மத்தியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Yves Le Drian, இந்த வாரம் பாரிஸிக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செயலாளர் Antony Blinken உடன் வெளிப்படையான மற்றும் உறுதியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறினார். +
இந்த பிரச்சனை இன்னும் சீரியஸாக தான் இருக்கிறது, இன்னும் தீர்க்கப்படவில்லை. இப்போது தான் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளோம், அது நீடிக்கும்.
இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தையை விட நடவடிக்கைகளை தான் நாங்கள் விரும்புகிறோம்.
இருதரப்பும் அக்டோபர் இறுதிக்குள் இப்பிரச்சனையில் ஒரு முடிவை எட்ட தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என கூறினார்.
அதேசமயம், அக்டோபர் நடுப்பகுதியில் அமெரிக்க ஜனாபதி ஜோ பைடனுடம் பிரான்ஸ் ஜனாதிபதி மாக்ரோன் மீண்டும் பேச்சுவார் என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Yves Le Drian தகவல் தெரிவித்துள்ளார்.