நாங்கள் நினைத்தால் பிரெக்சிட் ஒப்பந்தத்தை தடுத்துவிடுவோம்: மிரட்டும் பிரான்ஸ்
பிரெக்சிட் தொடர்பில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் தங்களுக்கு திருப்தியாக இல்லயென்றால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறியுள்ளது பிரான்ஸ் தரப்பு.
ஒப்பந்தம் மோசமானதாக இருக்கும் பட்சத்தில், அதாவது அந்த ஒப்பந்தம் எங்கள் மீனவர்களை பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்கவில்லை என்றால், அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறியுள்ளார் பிரெஞ்சு ஐரோப்பிய அமைச்சரான Clement Beaune.
பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்தே, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிடிவாதமாக இருந்த விடயங்களில் ஒன்று, பிரெக்சிட்டுக்குப் பின் பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிக்க பிரான்ஸ் நாட்டு மீனவர்களை அனுமதிக்கவேண்டும் என்பதுதான்.
அந்த பிரச்சினை ஏற்படுத்திய அழுத்தம், ஒருவேளை ஒப்பந்தம் இல்லாமலே பிரெக்சிட் நிறைவேறிவிடுமா என்ற பதற்றத்தை ஏற்படுத்தியது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானைப் பொருத்தவரையில், 2022இல் அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டாகவேண்டும் என்பதால், அவர் தன் தரப்பு மீனவர்களுக்கு சாதகமாக செயல்படாவிட்டால், தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற தனிப்பட்ட அச்சமும் அவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பிரெஞ்சு ஐரோப்பிய அமைச்சரான Clement Beaune கூறுவதைப்போலவே, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் செய்யப்படும் ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஒப்புக்கொள்ளாவிட்டால், அதை நிறைவேற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.