பிரான்சில் இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கான நாட்கள் நீட்டிப்பு! வெளியான முக்கிய தகவல்
பிரான்சில் கொரோனா தடுப்பூசிக்கான இர்ண்டாவது டோஸ் போடுவதற்கான நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரான்சில் தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அதன் ப்டி முதல் தடுப்பூசி போடப்பட்ட இரண்டு வாரங்களுக்கு பின் இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 42 நாட்களுக்கு பின் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது தற்போது மேலும் இரண்டு வாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த எட்டு வாரங்கள் வரையான இடைவெளிகளை ஏற்படுத்துவதற்கான ஓர் அரசாணையை இனனமும் சில நாட்களில் அறிவிக்க உள்ளதாக பிரான்சின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் கொரோனத் தடுப்பு ஊசிக்கான நேரம் வழங்கப்பட்டிருக்கும் காலத்தில் விடுமுறையில் செல்லவேண்டாம் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், நீங்கள் ஒரு தடுப்பூசி மையத்தில் முதலாவது ஊசி போட்டிருந்தால், அப்போதே உங்களிற்கான இரண்டாவது ஊசியின் திகதி பதிவு செய்யப்பட்டுத் தரப்பட்டிருக்கும்.
இனிமேல் அந்தத் திகதியானது ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஒத்தி வைக்கப்படலாம். இதன் மூலம் ஜுன் மாதத்தில் கொரோனத் தடுப்பு ஊசிகளின் வேகத்திற்கு தடைவராமல் பார்த்துக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.