பிரான்சில் இரண்டாவது முறை ஏற்பட்ட மின்தடை: நாசவேலை என சந்தேகம்
திரைப்பட விழாவுக்கு புகழ் பெற்ற பிரான்சின் கேன்ஸ் நகரில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட மின்தடை விழாவுக்கு பெரும் இடையூறாக அமைந்தது.
இந்நிலையில், நேற்று மீண்டும் ஒரு மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த சம்பவங்களின் பின்னணியில் நாசவேலை ஏதேனும் இருக்கலாம் என சந்தேகம் உருவாகியுள்ளது.
பிரான்சில் ஏற்பட்ட இரண்டாவது மின்தடை
நேற்று இரவு 2.00 மணியளவில், பிரான்சின் Nice நகரில் துணைமின்நிலையம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தொன்றைத் தொடர்ந்து, நகரில் மின்தடை ஏற்பட, நகரம் இருளில் மூழ்கியது.
மின்தடையால் சுமார் 45,000 வீடுகள் பாதிக்கப்பட்டன. Nice விமான நிலையம், ட்ராம் சேவை ஆகியவையும் பாதிக்கப்பட்டன.
துணைமின் நிலையத்துக்கு அருகே வாகனங்கள் வந்து சென்றதற்கு அடையாளமாக, டயர் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, நாசவேலையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |