ஆங்கிலக்கால்வாய் புலம்பெயர்ந்தோர் உயிரிழப்புகள்: யார் காரணம்? பிரான்ஸ் தரப்பின் கருத்து
செவ்வாயன்று, பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், ஆங்கிலக்கால்வாயில் மூழ்கி 12 புலம்பெயர்வோர் உயிரிழந்தார்கள்.
அவர்களில் ஆறு சிறுவர்களும், ஒரு கர்ப்பிணிப்பெண்ணும் அடங்குவர்!
ஆங்கிலக்கால்வாய் புலம்பெயர்ந்தோர் உயிரிழப்புகள்
இப்படி பிரித்தானியாவுக்குள் நுழையும் ஆசையில், ஆங்கிலக்கால்வாயில் மூழ்கி உயிரிந்தவர்கள் ஏராளம்.
பிரான்ஸ் தரப்பிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்சுக்கு பணம் கொடுக்கிறது.
என்றாலும், ஆட்கடத்தல்காரர்கள் தொடர்ந்து புலம்பெயர்வோரை ஆங்கிலக்கால்வாய் வழியாக ஆபத்தான வகையில் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
யார் காரணம்? பிரான்ஸ் தரப்பின் கருத்து
இந்நிலையில், ஆங்கிலக்கால்வாயில் மூழ்கி புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பதற்கு பிரித்தானியாதான் காரணம் என்னும் கருத்து பிரான்சில் நிலவிவருகிறது.
செவ்வாயன்று நிகழ்ந்த துயர உயிரிழப்புகளைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmaninஇன் கருத்தும் அதற்கிணங்கவே உள்ளது.
அவர் ஆட்கடத்தல்காரர்களை வன்மையாக கண்டித்தார் என்றாலும், அவரது கருத்துக்கள், பிரித்தானியாவின் அதிக கட்டுப்பாடுகள் இல்லாத தொழிலாளர் சந்தை புலம்பெயர்வோரை பிரித்தானியாவை நோக்கி கவர்ந்திழுப்பதாக உள்ளது என்னும் ரீதியிலேயே அமைந்திருந்தது.
இளம் எரித்ரிய நாட்டவர்கள், சூடான் நாட்டவர்கள், ஆப்கன் நாட்டவர்கள், சிரியா மற்றும் ஈராக் நாட்டவர்கள் பிரான்ஸ் கடற்கரைக்கு வந்துவிட்டால் போதும் என நினைக்கிறார்கள்.
ஒரு சிறிய நீர்ப்பரப்பைக் கடந்துவிட்டால் அல்லது பாதிவழி சென்றுவிட்டால் கூட பிரித்தானியாவில் வேலை கிடைத்துவிடும், அதுவும், முறையான ஆவணங்கள் இல்லாவிட்டால் கூட பிரித்தானியாவில் வேலை கிடைத்துவிடும் என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |