பிரான்சில் நாளை முதல் இந்த மாவட்டத்தில் இனி முகக்கவசம் கட்டாயமில்லை! வெளியான முக்கிய அறிவிப்பு: மகிழ்ச்சியில் மக்கள்
கொரோனா பரவல் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வரும் நிலையில், நாட்டின் முக்கிய மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சிஸ் அரசு கொரோனாவின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை என கடுமையான பாதிப்புக்குள்ளானது. ஆனால், தடுப்பூசி, சமூக இடைவெளி, கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி போன்றவையாள், இப்போது அங்கு கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
இதனால், ஊரடங்கு தட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், நாட்டின், Seine-et-Marne மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை, அதாவது மே 19-ஆம் திகதி முதல் இந்த தளர்வு நடைமுறைக்கு வருவதாகவும், 19-ஆம் திகதி முதல் கடைகளும், உணவக முற்றங்களும் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த கட்டுப்பாடும் தளர்த்தப்பட உள்ளன.
முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும், விருப்பப்பட்டால் அணியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு 100,000 பேருக்கும் 737 பேருக்கு தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், இன்று ஒவ்வொரு 100,000 பேருக்கும் 218 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்படுகின்றது என்பதால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, Seine-et-Marne மாவட்டத்தில் அனைத்து இடங்களுக்கும் இந்த கட்டுப்பாடு தளர்வு இல்லை எனவும், சில பகுதிகளுக்கு முகக்கவசம் தொடர்ந்தும் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.