10 ஆண்டுகளுக்கு குறையாத ஆக்சிஜன்! பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு பறந்து வரும் பெரும் உதவி! வெளியான வீடியோ
இந்தியாவுக்கு முதற்கட்ட உதவியாக 28 டன் மறுத்துவ உபகரணங்களை பிரான்ஸ் அரசு நாளை அனுப்புகிறது.
இந்தியா உடனான சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமான பிரான்சின் முதற்கட்ட உதவி நாளை வந்தடையும் என இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் (Emmanuel Lenain) தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
8 உலகத் தரம் வாய்ந்த ஆக்ஸிஜன் ஆலைகள் உட்பட 28 டன் மருத்துவ உபகரணங்கள் நாளை விமானம் மூலம் வந்தடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவற்றின் மூலம், 8 இந்திய மருத்துவமனைகள் குறைந்தது அடுத்த 10 ஆண்டுகளுக்கு தங்கு தடையின்றி ஆக்ஸிஜனை வழங்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
நாளை வரவுள்ள மருத்துவ உபகாரங்கள் பேக்கிங் செய்யப்படும் விடீயோ காட்சிகளை இம்மானுவேல் லெனைன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1st phase of ?? solidarity mission is underway. 28 tons of medical equipment will be flown in tomorrow, including 8 world-class oxygen plants that will make 8 Indian hospitals oxygen autonomous for 10+ years. #FranceStandsWithIndia @cmacgm @CdCMAE pic.twitter.com/WeOaAybzPC
— Emmanuel Lenain (@FranceinIndia) May 1, 2021
இந்நிலையில், பிரான்ஸ் இந்தியாவின் உண்மையான நண்பன் என நன்றிகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸால் மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சமீப நாட்களில் தொற்று காரணமாக இருப்பவர்களை விட, ஆக்சிஜன் கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் சீனா, பாகிஸ்தான், அமேரிக்கா உட்பட 40 உலக நாடுகள் இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசி, ஆக்சிஜன் உள்ளிட்ட அனைத்து அவரச உதவிகளையும் அளிக்க முன்வந்துள்ளன.