சிரிய ஜனாதிபதி பஷார் அசாத்தின் சித்தப்பாவுக்கு தண்டனையை உறுதி செய்தது பிரான்ஸ் நீதிமன்றம்! வெளியான முழு விபரம்
நிதி மோசடி குற்றங்களுக்காக சிரிய ஜனாதிபதி பஷார் அசாத்தின் சித்தப்பாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனை பிரான்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது.
மறைந்த சிரிய ஜனாதிபதி ஹபீஸ் ஆசாத்தின் இளைய சகோதரர் Rifaat Assad, மார்ச் 1984ல் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறி பிரான்சுக்கு குடியேறினார்.
Rifaat Assad-ன் சகோதரரும், மறைந்த சிரிய ஜனாதிபதியுமான ஹபீஸ் ஆசாத், தற்போதைய சிரிய ஜனாதிபதி பஷார் அசாத்தின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
1986 ஆம் ஆண்டில் Rifaat Assad-க்கு பிரெஞ்சு ஜனாதிபதி François Mitterrand, the Grand Cross of the National Order of the Legion of Honour விருது வழங்கி கௌரவித்தார்.
இந்நிலையில் நாடுகடத்தப்பட்ட Rifaat Assad, 2014ல் பிரான்சில் வரி மோசடி மற்றும் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
அதே நேரத்தில், 2017-ல் ஸ்பெயின் Rifaat Assad-ன் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை மற்றொரு பண மோசடி விசாரணையில் கைப்பற்றியது.
1984 முதல் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட சிரியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி Rifaat Assad, பணமோசடி, சிரிய பொது நிதியை மோசடி செய்தல் மற்றும் மோசமான வரி ஏய்ப்பு ஆகியவற்றில் குற்றவாளி என நிரூபனமானது.
90 மில்லியன் யூரோ மதிப்புள்ள சொத்துகளை மோசடி செய்ததற்காக Rifaat Assad-க்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டில், Rifaat Assad நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
ஆனால் இன்று பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம், Rifaat Assad-க்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.