மாணவ மாணவியர்களுக்கு ஒரு யூரோ மதிய உணவுத்திட்டம்: பிரான்சில் துவக்கம்
பிரான்சில் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு யூரோ மதிய உணவுத்திட்டம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
ஒரு யூரோ மதிய உணவுத்திட்டம்
பிரான்சிலுள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ மாணவியர்களில் பணப்பிரச்சினை காரணமாக 48 சதவிகித மாணவ மாணவியர் மதிய உணவு சாப்பிடாமல் இருப்பது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்தது.

அதேபோல, 23 சதவிகித மாணவர்கள் ஒரு மாதத்தில் பல நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது.
ஆக, மாணவ மாணவியரின் கஷ்டத்தைப் போக்குவதற்காக, அனைத்து மாணவ மாணவியருக்கும் தினமும் ஒரு யூரோவுக்கு மதிய உணவுத்திட்டம் வழங்கும் திட்டத்தை பிரான்ஸ் பல்கலைக்கழகங்கள் துவங்கியுள்ளன.
முன்பு, மதிய உணவின் விலை 3.30 யூரோக்கள். நான் ஒரு மாதத்துக்கு சுமார் 20 முறை சாப்பிட வருவேன். அதற்கு எனக்கு 60 யூரோக்கள் செலவானது. இனி எனக்கு வெறும் 20 யூரோக்கள்தான் செலவு என்கிறார் 18 வயது மாணவரான Alexandre Ioannides என்பவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |