பிரான்சில் மர அடுப்பு பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள்: ஒரு சுவாரஸ்ய தகவல்
In France, there are certain rules for installation of wood burning stove: பிரான்சில் மர அடுப்பு பயன்படுத்துவதற்கு பல விதிகள் உள்ளன.
ஆசிய நாடுகள் பலவற்றில் இப்போதும் பல வீடுகளில் மர அடுப்புகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், பிரான்சின் சில பகுதிகளில் மர அடுப்பு பயன்படுத்துவதற்கு பல விதிகள் உள்ளன என கூறும் சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மர அடுப்பு பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள்
பிரான்சில் மர அடுப்புகள் மற்றும் புகைபோக்கிகளை வீடுகளில் பொருத்த தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்கள் பெறவேண்டுமாம். அடுப்பை வீட்டில் பொருத்த நிபுணர்கள் யாரும் தேவையில்லை.

ஆனால், அந்த அடுப்பு சரியாகவும் பாதுகாப்பான முறையிலும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து அதற்கான சான்றிதழை வழங்க நிபுணர் ஒருவரை அழைக்கவேண்டும்!
அந்த சான்றிதழ், வீட்டைக் காப்பீடு செய்வதற்கு அவசியம். துரதிர்ஷ்ட வசமாக, ஒருவேளை தீவிபத்து ஏதாவது ஏற்பட்டுவிட்டால், அந்த சான்றிதழ் இல்லாவிட்டால் இழப்பை ஈடு செய்ய காப்பீட்டுத் தொகை கிடைக்காது.
மேலும், அப்படி தீவிபத்து ஏதாவது ஏற்பட்டுவிட்டால், உங்களிடம் அந்த பாதுகாப்பு சான்றிதழ் இல்லாவிட்டால், உங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.
அதேபோல, புகைபோக்கி அமைக்கவும் விதிகள் உள்ளன. அந்த புகைபோக்கியை அதற்கான பணியாளரை வைத்து ஆண்டுதோறும் ஆய்வு செய்து, அதை சுத்தம் செய்யவேண்டும்.
ஆக, மர அடுப்பும் புகைபோக்கியும் தீவிபத்தையோ, காற்று மாசுபாட்டையோ ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக பிரான்சின் பல பகுதிகளில் இந்த கட்டுப்பாடுகள் பயன்பாட்டில் உள்ளனவாம்!