அமைதியாக சில பணியாளர்களின் விசா புதுப்பித்தலை நிறுத்தியுள்ள பிரான்ஸ்
காசா விவகாரம் தொடர்பில் இஸ்ரேலுக்கும் பிரான்சுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகிவரும் நிலையில், ஒரு குறிப்பிட்ட வகை பணியாளர்களின் விசா புதுப்பித்தலை அமைதியாக நிறுத்தியுள்ளது பிரான்ஸ் அரசு.
விசா புதுப்பித்தலை நிறுத்தியுள்ள பிரான்ஸ்
ஆம், கடந்த ஆறு மாதங்களாக, பாரீஸில் இஸ்ரேல் விமான நிறுவனமான El Al நிறுவனத்தில் பாதுகாவலர்களாக பணியாற்றுவோரின் விசாக்கள் புதுப்பிக்கப்படவில்லை.
இந்த பணியாளர்கள், இஸ்ரேல் தூதரகப் பணிகளுக்கு உதவும் பணியாளர்களாக பாரீஸில் பணியாற்றிவருபவர்கள் ஆவர்.
இந்தப் பணியாளர்கள் பிரான்சில் வாழவும் பணி செய்யவும் உதவும் வகையில், அவர்களுக்கு பணி விசாக்கள் வழங்கப்பட்டுவந்தன.
ஆனால், அந்த விசாக்களை புதுப்பித்தல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், அந்தப் பணியாளர்கள் சட்டவிரோதமாக பிரான்சில் தங்கியிருப்பவர்களாக கருதப்படும் நிலை உருவாகியுள்ளது.
அல்லது, அவர்கள் பிரான்சைவிட்டு வெளியேறி இஸ்ரேலுக்கே திரும்பிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது என்கிறார் El Al நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணியாற்றும் ஒருவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |