ரஷ்யாவுக்கு பிரான்ஸ் கடும் கண்டனம்
பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் 34 பேரை ரஷ்யா வெளியேற்றியதற்கு பிரான்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை நியாயமானது அல்ல என்று கூறியுள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம், ரஷ்யாவிலுள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் பணி, தூதரக உறவுகளுக்கான வியன்னா ஒப்பந்தத்தின்படிதான் நடைபெறுகிறது என்றும், ஆனால், ரஷ்ய தூதரக அலுவலர்கள் உளவு பார்ப்பதாக சந்தேகத்தின் பேரிலேயே பிரான்ஸ் அவர்களை வெளியேற்றியதாகவும் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரான்ஸ் ரஷ்ய தூதரக அலுவலர்களை வெளியேற்றியது.
ஆனால், அதற்குப் பழிக்குப் பழி வாங்குவதாகக் கூறி, ரஷ்யா 34 பிரான்ஸ் நாட்டு தூதரக அலுவலர்களை வெளியேற்றுவதாக நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.