நெருங்கும் கால்பந்து இறுதிப் போட்டி: பிரான்ஸ் அணியை மொத்தமாக முடக்கியுள்ள சம்பவம்
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது ஞாயிறன்று நடைபெறவிருக்கும் நிலையில், பிரான்ஸ் அணி வீரர்கள் மர்ம காய்ச்சலுக்கு இலக்காகியுள்ளனர்.
காய்ச்சலுக்கு இலக்கான வீரர்கள்
குறைந்தது மூன்று வீரர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சியாளர் Didier Deschamps இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், முக்கிய வீரர்களான Dayot Upamecano மற்றும் Adrien Rabiot ஆகியோர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
@Shutterstock
இவர்கள் இருவரும் மொராக்கோ அணியுடனான அரையிறுதி ஆட்டத்திலும் களமிறக்கப்படவில்லை. இவர்கள் இருவரும் கடைசியாக இங்கிலாந்து அணியுடன் விளையாடிய பின்னர், ஆடும் வரிசையில் உட்படுத்தப்படவில்லை.
உடல் தகுதி பெறுவார்கள்
இருப்பினும், இருவரும் குணமடைந்து வருவதாகவே பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். மேலும், அர்ஜென்டினா அணியுடனான மோதலுக்கு முன்னர் அனைத்து வீரர்களும் உடல் தகுதி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
@getty
கத்தார் விளையாட்டு அரங்கங்களில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டிகள் காரணமாகவும் காய்ச்சல் பரவியிருக்கலாம் என கூறுகின்றனர்.
இதனையடுத்து தற்போது பிரான்ஸ் அணி திறந்தவெளி மைதானங்களில் பயிற்சியை முன்னெடுத்து வருகிறது.