பிரான்சில் நடந்த பயங்கரம்... இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவன்! கோமா நிலைக்கு சென்ற பரிதாபம்
பிரான்சில் மாணவன் ஒருவர் சுத்தியலால் அடித்ததால், அவர் கோமா நிலைக்கு சென்றுள்ள நிலையில், அந்த மாணவனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிரான்சின் Saint-Michel-sur-Orge-ல் இருக்கும் Léonard-de-Vinci லிசேயின் வாயிலில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த குழு மோதலில், 15 வயதுடைய சிறுவன் தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டு, தலை பிளந்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்த பொலிசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சிறுவனை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்,
மருத்துவமனையில் அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள், செயற்கை கோமா நிலையில் இருப்பதாகவும், இன்னும் சிறுவன் ஆபத்தான நிலையை தாண்டவில்லை என்று கூறியுள்ளனர்.
இது குறித்து மாணவனின் தந்தை, பொலிசாரும், அரசாங்கமும் இன்னும் என்ன நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த 21-ஆம் நூற்றாண்டில், பள்ளிகள் முன்னால் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது வேதனையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சிறுவன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பொது, சக மாணவர்களில் ஒருவன், உடனடியான ஒரு வெள்ளைத் துணியால் தலையைக் கட்டி முதலுதவி செய்துள்ளனர்.
ஆனால் இந்த மாணவனைத் தாக்கியவர்கள் முகக்கவசத்தால் முகத்தை மறைத்தபடி தப்பி ஓடிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.