மேக்ரானை விமர்சித்த இத்தாலி துணை பிரதமர்: இத்தாலி தூதருக்கு பிரான்ஸ் சம்மன்
பிரான்சுக்கான இத்தாலி நாட்டு தூதருக்கு பிரான்ஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
மேக்ரானை கேலி செய்த இத்தாலி துணை பிரதமர்
பிரான்ஸ் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிப்பதால், இத்தாலி துணை பிரதமரான மேட்டியோ சால்வினி (Matteo Salvini) பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானை கேலி செய்துள்ளார்.
மேக்ரான் உக்ரைனுக்கு படைகளை அனுப்புவதை ஆதரிப்பாரானால், அவரே ஒரு ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு படைவீரர்களுடன் உக்ரைனுக்குச் செல்லலாமே என்று கூறியுள்ளார் சால்வினி.
அதைத் தொடர்ந்து, பிரான்சுக்கான இத்தாலி தூதரான இமானுவலா டி அலெசாண்ட்ரோவுக்கு (Emanuela D'Alessandro) பிரான்ஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
இத்தாலி துணை பிரதமரின் கருத்துக்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் வரலாற்றுப்பூர்வ உறவுகளுக்கு எதிரானவை என்றும், அத்துடன், அவை, உக்ரைன் ஆதரவு தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த, இருதரப்புக்கும் இடையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு எதிரானதாகவும் உள்ளன என்றும் இத்தாலி தூதருக்கு நினைவூட்டப்பட்டதாக பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |