உக்ரைன் உயிரிழப்புக்களை கேலியாக்கி ரஷ்ய தூதரகம் வெளியிட்ட ட்வீட்: ரஷ்ய தூதருக்கு பிரான்ஸ் சம்மன்
உக்ரைனில் அராஜக செயல்களில் ஈடுபட்டது மட்டுமின்றி, இறந்து போன உக்ரைனியர்களின் படங்களை வெளியிட்டு கேலி செய்தும் மகிழ்கிறது ரஷ்யா.
பாரீஸில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்ட ட்வீட் ஒன்றில், தெரு ஒன்றில் கொல்லப்பட்டுக் கிடக்கும் உக்ரைனியர்களின் உடல்களைக் காட்டும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதன் அருகில் ’Bucha நகரிலுள்ள திரைப்பட செட்’ என்ற வாசகங்கள் (Film set, town of Bucha) எழுதப்பட்டிருந்தன.
அந்த ட்வீட் வெளியானதைத் தொடர்ந்து, பிரான்சுக்கான ரஷ்ய தூதருக்கு பிரான்ஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
சகிக்க இயலாத வகையில் காணப்பட்ட அந்த ட்வீட் வெளியானதைத் தொடர்ந்து ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான Jean-Yves Le Drian வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த ட்வீட் அகற்றப்பட்டுவிட்டது.
ஏற்கனவே ரஷ்யா உக்ரைனில் மேற்கொண்டுள்ள அராஜகச் செயல்களால் உலகமே கொதித்துப்போயுள்ள நிலையில், ரஷ்ய தூதரகம் வெளியிட்ட அந்த ட்வீட் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய விவகாரங்களுக்கான பிரெஞ்சு அமைச்சரான வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில், ரஷ்ய தூதரகத்தின் ட்வீட் வெட்கத்திற்கும் அப்பாற்பட்டது என்று கூறி, அவ்வாறு செய்வதை நிறுத்துமாறும் தெரிவித்துள்ளார்.