பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல் தொடர்பில் நிபுணர் முக்கிய தகவல்

France
By Balamanuvelan Oct 14, 2026 09:51 AM GMT
Report

Supermarket fridge hacking attacks due to lack of basic cybersecurity measures: பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் மீதான சைபர் தாக்குதல்களுக்கு, அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் கூட எடுக்கப்படாததே காரணம் என்கிறார் நிபுணர் ஒருவர்.

பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் நிபுணர் ஒருவர் முக்கிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை இரவு துவங்கி, பிரான்சிலுள்ள பல்வேறு பல்பொருள் அங்காடிகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகள் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. 

பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல் தொடர்பில் நிபுணர் முக்கிய தகவல் | France Supermarket Hack Lack Cybersecurity Measure

அதாவது, ஹேக்கர்கள் குளிர்சாதனப்பெட்டிகள், உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட அறைகளின் வெப்பநிலையை 50 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்த்தியதால், அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வீணாகியுள்ளன.

உணவுப்பொருட்கள் கெட்டுப்போனதால், அவற்றை முழுமையாக குப்பையில் வீசவேண்டிய நிலை உருவாகியுள்ளது. 

பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் மீது திடீர் சைபர் தாக்குதல்: கடும் இழப்பு

பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் மீது திடீர் சைபர் தாக்குதல்: கடும் இழப்பு

அத்துடன், வெப்பநிலை அதிகமானதால் சில இடங்களில் தீவிபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

பல பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நிபுணர் முக்கிய தகவல்

இந்நிலையில், பல்பொருள் அங்காடிகள் மீதான சைபர் தாக்குதல்களுக்கு, அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் கூட எடுக்கப்படாததுதான் காரணம் என்கிறார் நிபுணர் ஒருவர்.


என்னும் சைபர் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனத்தில் பாதுகாப்பு நிபுணராக பணியாற்றும் மார்த்தா (Marta Rybczynska) என்பவர், பாதுகாப்பு சாஃப்ட்வேரையும் பாஸ்வேர்டுகளையும் தொடர்ந்து அப்டேட் செய்வது அவசியம் என்கிறார்.

அதாவது, இணையத்துடன் இணைக்கப்பட்ட எந்த உபகரணங்களும் சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் என எச்சரிக்கும் மார்த்தா, அது வீடானாலும் சரி, இதுபோன்ற பல்பொருள் அங்காடிகளானாலும் சரி, இணையத்துடன் இணைக்கப்பட்ட உபகரணங்களை தொடர்ந்து அப்டேட் செய்வதன் மூலம் இதுபோன்ற ஹேக்கர்களின் நடவடிக்கைகளைத் தடுக்கலாம் என்கிறார்.

பல்பொருள் அங்காடிகள், நாம் ஒரு சிறிய நிறுவனம்தானே, இதை யார் என்ன செய்யப்போகிறார்கள் என நினைக்கிறார்கள். ஆனால், பல்பொருள் அங்காடிகள் சின்ன விடயம் அல்ல என்பதை இந்த சைபர் தாக்குதல் உறுதி செய்துள்ளது.

அந்த தாக்குதலால் பண இழப்பு மட்டுமல்ல, விலைவாசி உயர்ந்து கொண்டே செல்லும் இத்தகைய காலகட்டத்தில் அவ்வளவு உணவுப்பொருட்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளன.

ஆக, பாதுகாப்பு சாஃப்ட்வேரையும் பாஸ்வேர்டுகளையும் தொடர்ந்து அப்டேட் செய்வது போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் கூட இத்தகைய தாக்குதல்களைத் தடுக்கமுடியும் என்கிறார் மார்த்தா.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US