பிரான்சில் டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகம்
Tankers are supplying drinking water in drought stricken France: வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரான்சில், டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
பிரான்சில் வழக்கமாக குடிநீர் விநியோகம் தாராளமாக இருக்கும் பகுதிகளில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.
இந்தக் கோடையின் கடுமையான வெப்பம், அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள பிரான்ஸ் மட்டுமல்ல, ஐரோப்பாவும் தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகம்
பொதுவாக பிரான்சில் பால், அல்லது எண்ணெய்தான் டேங்கர் லொறிகள் மூலம் கொண்டு செல்லப்படும்.

ஆனால், வழக்கத்துக்கு மாறாக பிரான்ஸ் மக்கள் டேங்கர் லொறிகளில் குடிநீர் கொண்டு செல்லப்படும் காட்சிகளை கண்டுவருகிறார்கள்.
பிரான்சைப் பொருத்தவரை, சுமார் 40,000 பேர் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சுமார் 550,000 பேர் தொடர்ச்சியாக குடிநீர் விநியோகம் வழங்கப்படுதலை இழக்கும் அபாயத்தில் உள்ளார்கள்.
பிரான்சின் பெரும்பாலான பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் தண்ணீர்க் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
விடயம் என்னவென்றால், அப்படியிருந்தும் சில பகுதிகளில்தான் டேங்கர் லொறி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
அதாவது, ஒரு முனிசிபாலிட்டி, குடிநீர் தேவைகளுக்காக எந்த தண்ணீர் ஆதாரத்தை நம்பியுள்ளது, ஒரு ஆதாரம் உதவாமல் போனால் அதற்கு மாற்றாக வேறு குடிநீர் ஆதாரம் ஏதேனும் உள்ளதா என்பதைப் பொருத்தே எந்த பகுதிகளுக்கு டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |