பிரித்தானியாவை தொடர்ந்து பிரான்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தென் ஆப்பிரிக்க நாடுகளில் புதிய கொரோனா மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியாவை போலவே பிரான்ஸும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமுல்படுத்தியுள்ளது.
புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் நுழைந்து விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக பல தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான விமான போக்குவரத்தை பிரான்ஸ் நிறுத்தியுள்ளது.
பிரித்தானியா அறிவித்தது போன்ற, தென் ஆப்பிரிக்கா, Lesotho, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, Mozambique, நமீபியா மற்றும் Eswatini ஆகிய நாடுகள் உடனான விமான போக்குவரத்தை பிரான்ஸ் நிறுத்தியுள்ளது.
இந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் உடனடியாக நிறுத்தப்படும் என்றும், குறைந்தது 48 மணிநேரத்திற்கு இது அமுலில் இருக்கும் என்று பிரான்ஸ் பிரதமர் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 14 நாட்களில் இந்த நாடுகளில் ஒன்றில் இருந்த பிரான்ஸ் வந்தவர்கள், உடனடியாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், கூடிய விரைவில் RT-PCR ஸ்கிரீனிங் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என பிரான்ஸ் அரசு அழைப்பு விடுத்துள்ளது.