பிரித்தானியர்களுக்கு விதிக்கபட்ட தடை தொடர்பில் பிரான்ஸ் புதிய அறிவிப்பு!
பிரித்தானியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வேகமாக பரவிவந்ததால் டிசம்பர் 18 காலை முதல், அத்தியாவசிய காரணமின்றி பிரித்தானியாவுக்கு செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்கும் பிரான்ஸ் தடை விதித்தது.
பிரெஞ்சு குடிமக்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் மட்டும் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்குத் திரும்பலாம் என்று பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்தது.
அதுமட்டுமின்றி, பிரித்தானியர்கள் பிரான்ஸ் வழியாக மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லக் கூட அனுமதியில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்தது.
இந்நிலையில், பிரித்தானியா பயணிகள் பிரான்ஸ் வழியாக செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் பிரித்தானியா குடிமக்கள், மீண்டும் பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் வழியாக அவர்கள் வசிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அத்தியாவசிய காரணமின்றி பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் வருபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது.
மேலும், இது உடனடியாக அமுல்படுத்துப்படும் என பிரான்ஸ் அறிவித்துள்ளது.