பிரான்சில் இந்த மாகாணங்களில் கடுமையாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! வெளியான தகவல்
பிரான்சில் குறிப்பிட்ட சில மாகாணங்களில் கொரோனா பரவல் தீவிரமாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய பீட்டா வகை கொரோனா வைரஸ் பிரான்சில் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது கடல் கடந்த தீவு மாகாணங்களான பொலினேசித் தீவுகளில் கொரோனாத் தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது.
குறிப்பாக, Tahiti உட்பட இங்குள்ள தீவுகளில் மிகக் கடுமையான கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம், இங்கு கொரோனாத் தொற்று 100000 பேரிற்கு 6 என்ற விகிதத்தில் இருந்தது.
ஆனால், இது திடீரென இந்த வாரம் கிட்டத்தட்ட 45 மடங்கு அதிகரித்து, 100000 பேரிற்கு 267 ஆக மாறியுள்ளது. இங்கிருக்கும் கொரோனா நோயாளிகள் ஏராளமானோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், பிரான்சின் கடல் கடந்த மகாணமான Martinique தீவிலிருந்து கொரோனா நோயாளிகள், நிலப்பரப்பில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.
ஏனெனில், அங்கு கொரோனா பரவல் பாதிப்பு தீவிரமாக இருப்பதால், இராணுவ விமானம் மூலம் அங்கிருக்கும் கொரோனா நோயாளிகள் நிலப்பரப்பிற்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.