France Talent Passport: சில பயனுள்ள தகவல்கள்...
வெளிநாட்டவர்கள் பிரான்சில் பணி செய்யும் வகையில், France Talent Passport என்னும் நீண்ட கால குடியிருப்பு அனுமதி ஒன்றை பிரான்ஸ் அரசு வழங்குகிறது.
France Talent Passport என்பது என்ன?
France Talent Passport என்பது, பிரான்சின் பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, வெளிநாட்டுப் பணியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்வோருக்கு பிரான்ஸ் அரசு வழங்கும் ஒரு நீண்ட கால குடியிருப்பு அனுமதியாகும்.
இந்த அனுமதி, நீங்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிரான்சில் வாழவும், பணி செய்யவும் அனுமதிக்கிறது. அத்துடன், உங்களுடன் உங்கள் குடும்பத்தினரும் பிரான்ஸ் வரலாம். அவர்களுக்கும் கணவன் அல்லது மனைவிக்கான நீண்ட கால குடியிருப்பு அனுமதி வழங்கப்படும்.
இந்த France Talent Passport யார் யாருக்கு?
இந்த அனுமதி, பிரான்சின் பொருளாதாரத்துக்கு பங்களிக்கும் தகுதி பெற்ற நபர்களுக்கானதாகும். இந்த சிறப்பு அனுமதியைப் பெறுவதற்கு, கீழ்க்கண்ட தகுதிகள் தேவை:
France Talent Passport பெற விரும்புவபவர், தகுதியான பணியாளராக இருக்கவேண்டும்,
ஒரு புதுமையான விடயங்களை உருவாகும், புதுமைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் நிறுவனத்தால் பணிக்கு அழைக்கப்பட்டவராக இருக்கவேண்டும்,
அவரது பணி, திறன்மிகுப் பணியாக இருக்கவேண்டும்,
ஒரு ஏஜன்சியால் பணிக்கமர்த்தப்பட்ட பணியாளர்,
ஆராய்ச்சியாளர்,
ஒரு நிறுவனத்தை உருவாக்குபவர்,
பொதுத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட புதுமையான திட்டம்,
முதலீட்டாளர்,
Social agent,
கலை மற்றும் கலாச்சாரத் தொழில்,
சர்வதேச அளவில் புகழ் பெற்றவர், என்னும் இந்த தகுதிநிலைகள், France Talent Passport பெற தேவையானவையாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |