பிரான்சில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி விஷயத்தில்...அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு!
பிரான்சில் அடுத்த ஒரு வாரத்திற்குள் 10 மில்லியன் பேருக்கு மூன்றாவது தடுப்பூசி போட அரசு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்றால், அதற்கு தடுப்பூசி தான் நிரந்தர தீர்வு என்பதால், உலகில் கொரோனா பரவலால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டால், பூஸ்டர் தடுப்பூசியாக மூன்றாவது தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், பிரான்ஸ் அரசு, அடுத்த ஒரு வாரத்திற்குள் 10 மில்லியன் பேருக்கு மூன்றாவது தடுப்பூசி போட அரசு தீர்மானித்துள்ளதாம்.
இது குறித்து, சுகாதார அமைச்சர் Olivier Véran கூறுகையில், இந்த வார இறுதிக்குள் நாம் 10 மில்லியன் பேருக்கு மூன்றாவது பூஸ்ட்டர் தடுப்பூசியினை நிறைவு செய்துவிடுவோம் என்று நம்புவதாக தெரிவித்தார்.
மிகவும் கடினமான இலக்கை நாம் சவாலுக்கு எடுத்துள்ளோம், தற்போது 7 மில்லியன் பேருக்கு தடுப்பூசி நிறைவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.