Birthright Citizenship விதிகளை கடுமையாக்க பிரான்ஸ் அரசு நிறைவேற்றியுள்ள மசோதா
பிரான்சின் கடல் கடந்த பிரதேசம் ஒன்றில், Birthright Citizenship விதிகளை கடுமையாக்கும் வகையில் மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது பிரான்ஸ் அரசு.
Birthright Citizenship
Birthright Citizenship அல்லது பிறப்புரிமை குடியுரிமை என்பது, ஒரு நாட்டுக்கு புலம்பெயர்ந்தோருக்கு, அந்நாட்டில் பிள்ளைகள் பிறக்கும்போது, தானாகவே அந்த பிள்ளைகளுக்கு அந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும் ஒரு உரிமையாகும்.
இந்தியப் பெருங்கடலில், பிரான்சுக்கு சொந்தமான மயாட் (Mayotte) என்னும் தீவு அமைந்துள்ளது.
பிறப்புரிமை குடியுரிமையின்படி, அந்த தீவில் பிறப்பவர்களுக்கு பிரான்ஸ் குடியுரிமை வழங்கப்படும்.
விதிகளை கடுமையாக்கும் பிரான்ஸ் அரசு
ஆனால், பிரான்சின் கடல் கடந்த பிரதேசமான மயாட்டில் பிறப்புரிமை குடியுரிமை விதிகளை கடுமையாக்கும் வகையில் மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது பிரான்ஸ் அரசு.
இந்த மசோதாவின்படி, இனி ஒரு தம்பதி மயாட்டில் சட்டப்படி ஒரு ஆண்டு வாழ்ந்திருப்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்படும்.
விடயம் என்னவென்றால், மயாட் தீவுக்கு சட்டவிரோதமாக வரும் புலம்பெயர்வோர், முதலில் பிரான்ஸ் குடியிருப்பு அனுமதியும், பிறகு பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்காகவே அத்தீவுக்கு வருகிறார்கள்.
சொல்லப்போனால், மயாட் தீவில் வசிப்பவர்களில், மயாட் தீவினரைவிட வெளிநாட்டவர்கள்தான் அதிகம்.
ஆகவே, இப்படி பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்காகவே மயாட் தீவுக்கு புலம்பெயர்வோர் வருவதைக் கட்டுப்படுத்துவதற்காகவே, பிரான்ஸ் செனேட், பிறப்புரிமை குடியுரிமை விதிகளை கடுமையாக்கும் வகையில் மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |