பிரான்ஸ், ஈரான் இடையே மும்முரமாகும் தூதரக மோதல்
France to expel two Iranian diplomats over alleged assault on French envoys: பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில், ஈரானிய தூதரக அதிகாரிகள் இருவரை பிரான்ஸ் வெளியேற்ற உள்ளது.
ஈரானிய தூதரக அதிகாரிகள் இருவரை பிரான்ஸ் வெளியேற்ற உள்ளதாக பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய தூதரக அதிகாரிகள் இருவரை வெளியேற்றும் பிரான்ஸ்
பிரான்ஸ், ஈரான் இடையே தூதரக ரீதியிலான மோதல் மும்முரமாகிவருகிறது.
ஜூலை மாதம் 19ஆம் திகதி, ஈரான் அதிகாரிகள், பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் இருவரை கைது செய்து காவலில் அடைத்து விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள்.

அப்போது, அவர்களில் ஒருவரை ஈரான் அதிகாரிகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஈரான் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவரை பிரான்ஸ் வெளியேற்ற இருப்பதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான ஜீன் நோயல் பாரட் தெரிவித்துள்ளார்.
அவர் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், பிரான்ஸ், ஈரான் நாட்டு மக்கள், கலைஞர்கள், அறிவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் நிற்பதாகவும், அதன் காரணமாகவே ஈரான் அதிகாரிகள் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளை தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இந்த நடவடிக்கை சகிக்க இயலாதது என்றும், அதற்கு தக்க பின்விளைவுகள் இல்லாமல் போகாது என்றும் ஏற்கனவே கூறியிருந்தேன் என்று குறிப்பிட்டுள்ள ஜீன் நோயல் பாரட், அது செயல்படுத்தப்பட்டுவிட்டது, ஈரான் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவரை, ஈரான் அரசு, விரும்பத்தகாத நபர்களாக (persona-non-grata) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |