அமெரிக்க சுதந்திர தினம்: பிரான்ஸ் நடத்த இருக்கும் நிகழ்ச்சி
அமெரிக்காவின் 250ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக பிரான்ஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறது.
அமெரிக்காவின் 250ஆவது பிறந்தநாள்
அமெரிக்காவும் பிரித்தானியாவின் கீழ் அடிமையாக இருந்தது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஆம், 1776ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 4ஆம் திகதிதான் அமெரிக்கா பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றுள்ளது.
அதைத்தான் அமெரிக்க மக்கள் அமெரிக்காவின் பிறந்தநாளாக கொண்டாடுகிறார்கள்.
அமெரிக்க பிறந்தநாளுக்காக பிரான்ஸ் நடத்தும் நிகழ்ச்சி
இந்த ஆண்டு அமெரிக்கா சுதந்திரம் பெற்ற 250ஆவது ஆண்டு என்பதால், அது தொடர்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் 250 ஆவது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், பிரான்ஸ், சுதந்திர தேவி சிலையில் பிரம்மாண்ட வண்ண ஒளிக்காட்சி ஒன்றை நிகழ்த்த உள்ளது.

சரி, அமெரிக்க சுதந்திரத்துக்கும் பிரான்சுக்கும் என்ன சம்பந்தம், எதனால் அமெரிக்க சுதந்திர தினத்தன்று சுதந்திர தேவி சிலையில் பிரான்ஸ் ஒளி நிகழ்ச்சி நடத்துகிறது?
அதாவது, அமெரிக்காவிலிருக்கும் சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு வழங்கியதே பிரான்ஸ்தான்.
1884ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 4ஆம் திகதி, பிரான்ஸ் அமெரிக்காவுக்கு சுதந்திர தேவி சிலையை பரிசளிக்க, 1886ஆம் ஆண்டு, அமெரிக்காவின் நூறாவது சுதந்திர தினத்தன்று அச்சிலை அமெரிக்காவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
அந்த சிலையை வடிவமைத்தவர் பிரபல பிரான்ஸ் நாட்டு சிற்பியான Frédéric Auguste Bartholdi என்பவர் ஆவார்.

இன்னொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், இன்று பச்சை நிறத்தில் காட்சியளிக்கு சுதந்திர தேவி சிலை உண்மையில் தாமிரம் அல்லது காப்பர் நிறம் கொண்டது.
தாமிரத்தால் செய்யப்பட்ட அந்த சிலை, நாளடைவில் கற்று, ஈரம் மற்றும் கடல் காற்றிலுள்ள உப்பு ஆகியவற்றால் ஆக்சிஜனேற்றம் அடைந்து பசை நிறமாக மாறிவிட்டது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |