காலியாக உள்ள வீடுகளுக்கு கூடுதல் வரி: பிரான்ஸ் திட்டம்
பிரான்சில் காலியாக உள்ள வீடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க அரசு திட்டமிட்டுவருகிறது.
காலியாக உள்ள வீடுகளுக்கு கூடுதல் வரி
பிரான்ஸ் போன்ற நாடுகளில், பலர் இரண்டாவதாக வீடு ஒன்றை, அல்லது வீடுகளை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். அவை வெறுமையாக இருக்கின்றன.

இன்னொரு பக்கமோ, மக்களுக்கு வீடுகள் கிடைப்பதில் பிரச்சினை உள்ளது, அதாவது, வீடுகள் பற்றாக்குறை நிலவுகிறது.
ஆகவே, காலியாக உள்ள வீடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுவருகிறது.
இந்த காலியாக உள்ள வீடுகள் என்பது, மின்சாரம், குடிநீர் விநியோகம் இருந்தும், ஓராண்டுக்காவது யாரும் வசிக்காமல் உள்ள வீடுகள் ஆகும்.
ஆக, அப்படி காலியாக உள்ள வீடுகளுக்கு, முதல் ஆண்டில் வாடகை மதிப்பில் 17 சதவிகிதமும், இரண்டாவது ஆண்டிலிருந்து 34 சதவிகிதமும் வரியாக விதிக்கப்பட உள்ளது.
குறிப்பாக, வீடுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் இடங்களில், தானாகவே இந்த புதிய வரி விதி பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த புதிய வரி, 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |