பிரித்தானியாவிலிருந்து வருபவர்களுக்கு பிரான்ஸ் அறிமுகப்படுத்த உள்ள கடுமையான கட்டுப்பாடுகள்! வெளியான முக்கிய தகவல்
கொரோனாவின் இந்திய மாறுபாடு குறித்த அச்சத்தால் பிரித்தானியாவிலிருந்து வருபவர்களுக்கு பிரான்ஸ் தனது கட்டுப்பாடுகளை கடுமையாக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
புதன்கிழமை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு பேசிய பிரான்ஸ் அரசாங்க செய்தித் தொடர்பாளர் Gabriel Attal, பிரித்தானியாவிலிருந்து வரும் அனைவருக்கும் பிரான்ஸ் கட்டாய தனிமைப்படுத்தலை அறிமுகப்படுத்தும் என்றார்.
அவை எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது போன்ற மற்ற விபரங்கள் சில மணிநேரங்களில் அறிவிக்கப்படும் என்றார்.
பிரான்ஸ் ஏற்கனவே கிட்டத்தட்ட இந்தியா உடனான அனைத்து போக்குவரத்தையும் தடைசெய்துள்ள பிரான்ஸ், கடுமையான 10 நாள் தனிமைப்படுத்தலை காவல்துறை மூலம் அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.