38 மில்லியன் குடிமக்களுக்கு தலா 100 யூரோ வழங்கப்படும்! பிரான்ஸ் அரசு முக்கிய அறிவிப்பு
எரிபொருள் மற்றும் எரிசக்தி விலை உயர்வை எதிர்கொள்ள உதவும் வகையில், மாதந்தோறும் நிகர வருமானம் 2,000 யூரோ அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 100 யூரோ வழங்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கார் அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டாதவர்கள் உட்பட சுமார் 34 மில்லியன் பிரெஞ்சு மக்களுக்கு ‘பணவீக்கக் உதவிக்தொகை’ தானாகவே செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
டிசம்பர் மாத இறுதியில் வணிக ஊழியர்களுக்கு முதலில் பணம் செலுத்தப்படும். அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2022 ஆரம்பத்தில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 யூரோக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என அறிவத்த பிரான்ஸ் பிரதமர் Jean Castex, அரசுக்கு 3.8 பில்லியன் யூரோ செலவாகும், இது எரிபொருள் வரியை குறைக்கும் செலவை விட மிக குறைவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் எரிசக்தி விலைகள் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், 2022 ஆம் ஆண்டின் இறுதி வரை வீட்டு எரிவாயு விலைகளின் உச்சத்தில் இருக்கும் என்று Castex கூறினார்.
பிரான்சில் சுமார் 13 மில்லியன் ஓய்வூதியதாரர்கள் மற்றும் மூன்றில் இரண்டு பங்கு மாணவர்கள் 100 யூரோ பெறுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் டீசல் சராசரியாக லிட்டருக்கு 1.56 யூரோ உயர்ந்துள்ளது, மேலும் பெட்ரோல் லிட்டருக்கு 1.62 யூரோ உயர்ந்துள்ளது என daily Le Monde செய்தித்தாள் தெரிவித்துள்ளது.