மாதாந்திர போனஸ் வழங்கப்படும்! பிரான்ஸ் பிரதமர் முக்கிய அறிவிப்பு
பிரான்ஸ் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் செவிலியர்களுக்கு மாதாந்திர போனஸ் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
ஒமிக்ரான் மாறுபாட்டின் தீவிர பரவல் காரணமாக பிரான்சில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இதனால் பொது மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான மோதலால் சோர்வடைந்துள்ள சுகாதார ஊழியர்களின் வேலை நிலைமைகளை மேம்படுத்தும் வகையில், மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் செவிலியர்களுக்கு, ஜனவரி மாதம் முதல் மாதம் மாதம் கூடுதலாக 100 யூரோ போனஸாக வழங்கப்படும் என பிரதமர் Jean Castex அறிவித்தார்.
இது தீவிர சிகிச்சை பிரிவுகளில் பயிற்சி, தகுதி, வேலை நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் அங்கு பணிபுரிபவர்களின் திறன்களை அங்கீகரிப்பதற்காக என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
NHS உள்ள முன்கள ஊழியர்களின் பற்றாக்குறையை சமாளிக்க, பிரான்ஸ் சுகாதார அமைச்சர் Olivier Veran அடுத்த வாரம் பெரிய அளவிலான நடவடிக்கைகள் வெளியிட உள்ள நிலையில், மாதாந்திர போனஸ் குறித்த அறிவிப்யை பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.