விமான கட்டணங்களை உயர்த்தும் பிரான்ஸ்: இதற்காகத்தானாம்...
அடுத்த பட்ஜெட்டில், விமான பயணச்சீட்டுக் கட்டணங்களை உயர்த்த இருப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்
பிரான்ஸ், அடுத்த பட்ஜெட்டில் விமான பயணச்சீட்டுகளின் விலையை அதிகரிக்க இருப்பதாக நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சரான Clément Beaune தெரிவித்துள்ளார்.
ஆனால், எவ்வளவு விலை உயர்த்தப்படும் என்பது போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.
காரணம் இதுதான்
பலர் தன்னிடம், விமான பயணச்சீட்டுகளைவிட, ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக தெரிவிப்பதாகக் கூறும் அவர், ரயில்வே துறையில் முதலீடு செய்ய பணம் தேவைப்படுகிறது என்கிறார்.
ஆகவே, 2024ஆம் ஆண்டின் பட்ஜெட்டில், விமான பயணச்சீட்டுகள் மீதான வரியை அதிகரிக்க இருப்பதாக தெரிவிக்கும் Clément Beaune, அதிலிருந்து கிடைக்கும் பணத்தை ரயில்வே துறையில் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |