சிரியாவுக்கு தூதர்களை அனுப்பும் பிரான்ஸ்: பின்னணி
பிரான்ஸ் அரசு, சிரியாவுக்கு நாளை தூதர்கள் குழு ஒன்றை அனுப்ப முடிவு செய்துள்ளது.
சிரியாவுக்கு தூதர்களை அனுப்பும் பிரான்ஸ்
பிரான்ஸ் அரசு, நாளை செவ்வாய்க்கிழமை, தூதர்கள் குழு ஒன்றை சிரியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழல் குறித்து ஆராய்வதற்காக பிரான்ஸ் தூதர்கள் குழு சிரியா செல்வதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
என்றாலும், அந்தக் குழுவினர் யார் யாரையெல்லாம் சிரியாவில் சந்திப்பார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
சிரிய ஜனாதிபதியான பஷார் அல் அசாதுடனான உறவுகளை 2012ஆம் ஆண்டுடன் முறித்துக்கொண்ட பிரான்ஸ், அதற்குப் பிறகு அந்த உறவுகளை சரி செய்ய இதுவரை முயற்சிக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |