உணவு இறக்குமதி தொடர்பில் புதிய ஆணை பிறப்பிக்க பிரான்ஸ் முடிவு
உணவுப்பொருட்கள் இறக்குமதி தொடர்பில், புதிய கட்டுப்பாடுகளை விதிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
உணவுப்பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாடுகள்
ஐரோப்பிய ஒன்றியமும், அர்ஜெண்டினா, பிரேசில், பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் இணைந்த அமைப்பான Mercosur என்னும் அமைப்பும், இம்மாதம் 12ஆம் திகதி வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன.
Mercosur ஒப்பந்தம் என்னும் அந்த ஒப்பந்தத்தின்கீழ், தென் அமெரிக்க உணவுப்பொருட்கள் எளிதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படமுடியும்.

ஆனால், அதற்கு பிரான்ஸ் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். அந்த ஒப்பந்தம், மலிவான, ஐரோப்பிய ஒன்றிய உணவு மற்றும் சுற்றுச்சுழல் தரநிலைகளுக்கு ஏற்றவையாக இல்லாத உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட வழிவகை செய்யும், உள்ளூர் பொருட்களுக்கு நியாயமற்ற வகையில் போட்டி உருவாகிவிடும் என அவர்கள் கூறிவருகிறார்கள்.
ஆகவே, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, தென் அமெரிக்க உணவுப்பொருட்கள் இறக்குமதி தொடர்பில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க இருப்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

அவ்வகையில், தரநிலைகளுக்கு உட்படும் பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும் என்றும், தடை செய்யப்பட்ட ரசாயனங்களைக் கொண்ட உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் வகையில் ஆணை ஒன்றை பிறப்பிக்க இருப்பதாகவும் பிரான்ஸ் வேளாண்மைத்துறை அமைச்சரான ஆனி (Annie Genevard) தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |