பிரான்சில் நாளை முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி! என்னென்ன வேண்டும்? வெளியான முக்கிய அறிவிப்பு
பிரான்சில் நாளை முதல் 12 வயதில் இருக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்படவுள்ளதால், அதற்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஆரம்பத்தில் வயதானோர், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
அதன் பின் அடுத்தடுத்த கட்டத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் படி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், கடந்த 2-ஆம் திகதி 12 வயது முதல் உடையவர்களுக்கு தடுப்பூசி போடும் முடிவை எடுத்திருப்பதாகவும், இந்த தடுப்பூசி போடும் பணி வரும் 15-ஆம் திகதி முதல் துவங்கும் என அறிவித்திருந்தார்.
அதன் படி, நாளை இந்த தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாகவுள்ளது. இதில், 12 முதல் 17 வயதிற்குட்பட்டவர்கள் போட்டுக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் அதற்கு பெற்றோரின் சம்மத சான்றிதழை பெற வேண்டும்.
அவர்கள் அனுமதித்தால் மட்டுமே இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள முடியும். இதற்காக சுகாதார அமைச்சகம், அந்த சான்றிதழை பதிவிறக்கம் செய்வதற்கான இணையத்தை வெளியிட்டுள்ளது.
தடுப்பூசி போட வருவதற்கு முன், இந்த அனுமதி சான்றிதழியில் அவர்கள் தங்களின் முழு விவரத்தை நிரப்பி, அதன் பின் பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்று வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களது பெற்றோர்களது சம்மத சான்றிதழ் தேவைப்படுகின்றது. அவர்களது அனுமதியுடன் மாத்திரமே தடுப்பூசி போடப்படும் என ஒற்றுமை மற்றும் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளதுடன், குறித்த சான்றிதழை தரவிறக்கம் செய்யும் இணைப்பையும் பகிர்ந்துள்ளது.