பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை: நீதிமன்றம் அதிரடி
France’s top court bans Halloween protest in the heart of Paris: தலைநகர் பாரீஸுக்குள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு பிரான்ஸ் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிரான்சில் பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்திய வாரங்களில் வன்முறை வெடித்துள்ளது, பொதுச்சொத்துகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுளது.
இந்நிலையில், ஹாலோவீன் பண்டிகையை ஒட்டி, வார இறுதியில், பாரீஸில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தார்கள்.
உச்ச நீதிமன்றம் தடை
பாரீஸின் மையப்பகுதியிலுள்ள Place de la Bastille என்னுமிடத்திலிருந்து Place de la Nation என்னுமிடம் வரை பேரணி நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால், அதற்கு பொலிசார் தடை விதிக்க, ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை மாலையே பாரீஸ் நீதிமன்றத்தை அணுகினார்கள். பாரீஸ் நீதிமன்றம், பொலிசார் விதித்த தடையை நீக்கிவிட்டது.
உடனடியாக, பொலிசார் உச்சநீதிமன்றத்தை நாட, இன்று காலை, பொலிசாருக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, பாரீஸில் திட்டமிடப்பட்ட பகுதியில் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், பாரீஸுக்கு வெளியே, புறநகர்ப்பகுதியில் ஆர்ப்பாட்டங்களை வைத்துக்கொள்ளலாம் என கூறிவிட்டது.