பிரான்சில் ஒரு அபூர்வ சூறாவளி: ஒருவர் பலி
பிரான்சை தாக்கிய அபூர்வ சூறாவளி ஒன்று ஒரு உயிரை பலிவாங்கியுள்ளது.
பிரான்சில் ஒரு அபூர்வ சூறாவளி
பிரான்சை இப்படி ஒரு சூறாவளி தாக்கியதில்லை என்கிறார்கள் மக்கள்.
அப்படி ஒரு அபூர்வ சூறாவளி பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு 20 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள Ermont நகரை நேற்று துவம்சம் செய்துள்ளது.
சூறாவளியால் 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், Ermont நகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Photograph: Syndicat Alliance Police Nationale/AFP/Getty Images
சூறாவளிக்காற்றில் மூன்று கிரேன்கள் கவிழ்ந்துள்ளன. அவற்றில் ஒன்று ஒரு சிறிய மருத்துவமனை மீது விழுந்துள்ளது.
பல வீடுகள், அலுவலகங்களின் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, சூறாவளிக்கு ஒருவர் பலியாகிவிட்டார், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.
ஏராளமானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 80 தீயணைப்பு வீரர்கள், 50 பொலிசார் மற்றும் 20 மருத்துவ உதவிக்குழுவினர் களத்தில் உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.