பிரான்சில் சுற்றுலா பயணிகள் சென்ற விமானம் விபத்து: 5 பேர் மரணம்
பிரான்சில் சுற்றுலா விமானம் மலை மீது மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சனிக்கிழமையன்று பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் Isère பகுதியில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட விமானத்தில் பயணித்த அனைவரும் பலியானதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு பிரான்சில் உள்ள கிரெனோபில் அருகே உள்ள வெர்சௌட் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
Representative Image
விபத்தை நேரில் பார்த்தவர்கள் அவசர சேவைக்கு தகவல் கொடுத்தனர், அவர்கள் விமானத்தின் எரிந்த பாகங்களுக்கு நான்கு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தையின் உடல்களை கண்டுபிடித்தனர்.
தீயை அணைக்கும் பணியில் சுமார் 60 தீயணைப்பு வீரர்கள், 40 ஜெண்டர்ம்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட அவசர சேவை பணியாளர்கள், ட்ரோன் குழுவும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விபத்துள்ளன விமானம் சிறிய Jodel D140 வகை பயணிகள் விமானம் என தெரியவந்துள்ளது. கிரெனோபிள் வழக்கறிஞர்கள் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர் என்று பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.