பிரான்சில் இரயில் கட்டணத்தை குறைக்க திட்டம்? நடத்தப்பட்ட வாக்கெடுப்பு: வெளியான முக்கிய தகவல்
பிரான்சில் இரயில் கட்டணத்தை குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சில், இரயில் கட்டணத்தை குறைக்க, செனட் சபையில் நேற்று வாக்கெடுக்கப்பட்டது. அதாவது, சுற்றுச்சூழல் மாசைடைவை குறைக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த இரயில் கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டு வாக்கெடுக்கப்பட்டது.
அதில், இரயில் பயணச் சீட்டின் வரியில், 5.5 சதவீதம் குறைக்கலாம் எனவும், இதனால் பயணத்துக்கான செலவு குறைய, மக்கள் பலர் பொதுபோக்குவரத்தை பயன்படுத்துவார்கள் என்பதால் இந்த முடிவு கொண்டுவரப்பட்டது.
ஆனால் செனட் மேற்சபையில் வலதுசாரியினர் ஆக்கிரமித்திருந்ததால் இந்த வாக்கெடுப்பு வெற்றியில் முடியவில்லை.
வரியை குறைப்பதால் எந்த ஒரு பயனில்லை என அவர்கள் தரப்பு வாதம் இருந்தது. இதையடுத்து, விரைவில் மீண்டும் மற்றுமொரு வாக்கெடுப்பு இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.