பிரான்சில் இங்கு மின்சார ஸ்கூட்டர்களில் பயணிக்க தடை! மீறினால் 3,750 யூரோ வரை அபராதம் என அறிவிப்பு
பிரான்சின் சோப்ம்ஸ் எலிசே வீதியில் டார்ட்டினிட்டிஸ் என அழைக்கப்படும் மின்சார ஸ்கூட்டர்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் சோம்ப்ஸ்-எலிசே வீதியில், இந்த ஆண்டின் இறுதி கொண்டாட்டங்கள், அதாவாது புது வருடப் பிறப்பு மற்றும் கிறிஸ்துமஸ் சந்தைகள் போன்றவைகளுக்காக, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதை நேற்று இரவு பாரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ ஆரம்பித்து வைத்தார். இந்நிலையில், இங்கு trottinettes பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணிவரை இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது வரும் ஜனவரி மாதம் 2-ஆம் திகதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி இந்த தடையை மீறி, பயணித்தால் அவர்களுக்கு முதலில் 135 யூரோ அபாரதம் வசூலிக்கப்படும். அதுவே மூன்றாம் முறை பயணித்தால் 3,750 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.