படைவீரர்களை உக்ரைனுக்கு அனுப்புவது தொடர்பில் பிரான்ஸ் பிரித்தானியா ஆலோசனை
ஐரோப்பிய படைகளை உக்ரைனுக்கு அனுப்புவது தொடர்பில் பிரான்சும் பிரித்தானியாவும் ஆலோசனை நடத்திவருவதாக பிரபல பிரெஞ்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
படைகளை உக்ரைனுக்கு அனுப்புவது தொடர்பில் ஆலோசனை
பிப்ரவரியில், மேற்கத்திய நாடுகளின் படைகளை உக்ரைனுக்கு உதவியாக போரிட அனுப்புவது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் கருத்து தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துக்கு சில ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளதைத் தொடர்ந்து, ஐரோப்பிய படைகளை உக்ரைனுக்கு அனுப்புவது தொடர்பில் மீண்டும் விவாதங்கள் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
மேக்ரானும் பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரும் சமீபத்தில் பிரான்சில் சந்தித்த நிலையில், ஐரோப்பிய படைகளை உக்ரைனுக்கு அனுப்புவது தொடர்பில் மீண்டும் விவாதங்கள் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரான்ஸ் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர், உக்ரைனுக்கு படைகளை அனுப்புவதில் தங்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
என்றாலும், உக்ரைனுக்கு பிரித்தானிய படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |