ரஷ்யாவுடன் பனிப்போருக்கு திரும்ப எங்களுக்கு விருப்பமில்லை! பிரான்ஸ் திட்டவட்டம்
ரஷ்யாவுடன் பனிப்போருக்கு திரும்ப பிரான்ஸுக்கு விருப்பமில்லை என்று நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளை குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது.
உக்ரைனை ஆக்கிரமித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைசை்சர் Florence Parly கூறியதாவது, ரஷ்யா மீது ஏற்கனவே சில பொருளாதா தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
பிரச்சனை அதிகரித்தால் அந்த தடைகள் கடுமையாக்கப்படும். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தும்.
அதேசமயம், ரஷ்யாவுடன் பனிப்போருக்கு திரும்ப பிரான்ஸுக்கு விரும்பவில்லை என Parly திட்டவட்டமாக கூறினார்.
மேலும், பதட்டத்தை தணிக்க இருதரப்பும் அமைதியாக இருக்க வேண்டும் என பிரான்ஸ் பாதுகாப்பு அமைசை்சர் Florence Parly தெரிவித்துள்ளார்.