உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்: தன் குடிமக்களுக்கு பிரான்ஸ் அறிவுறுத்தல்
பிரான்ஸ், மாலி நாட்டிலிருக்கும் தன் குடிமக்களை உடனடியாக அந்த நாட்டைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் மாலி நாட்டிலிருக்கும் பிரான்ஸ் நாட்டு மக்கள் உடனடியாக அந்நாட்டிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், விமானம் வாயிலாக பயணிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், சாலைகள் தீவிரவாத குழுக்களின் தாக்குதலுக்குள்ளாகலாம் என்பதால் சாலை மார்க்கமாக பயணிப்பதைத் தவிர்க்குமாறும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மாலியின் தலைநகரான Bamakoவிலும் மற்ற பகுதிகளிலும் JNIM என்னும் ஆயுதமேந்திய குழு அன்றாட வாழ்க்கைக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது.
JNIM குழுவுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதற்கு மாலி அரசு தடை விதிக்க, பழிக்குப் பழியாக, மாலிக்கு வரும் எரிபொருள் அடங்கிய வாகனங்கள் மீது JNIM குழு தாக்குதல் நடத்திவருகிறது.

நாட்டுக்கு எரிபொருள் வருவது தடை செய்யப்படுவதால், எரிபொருள் பற்றாக்குறை, எரிபொருள் விலை, போக்குவரத்து கட்டணம் மற்றும் உணவுப்பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஆக, பல நாடுகள் மாலியில் வாழும் தங்கள் குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |