பிரான்சில் உள்ள ஒரு கிராமத்திற்கு 10 கோடி அனுப்பி வைத்த மர்ம நபர்! கடிதத்தில் சொல்லியிருந்த காரணம்
பிரான்சில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 500000 யூரோ அனுப்பி வைத்துள்ளது, அங்கிருந்தவர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பிரான்சின் Aude மாவட்டத்தில் உள்ள Esperaza என்ற சிறிய கிராமத்தின் நகர சபைக்கு கடந்த செப்டம்பர்(2021) மாதம் 22-ஆம் திகதி கடிதம் ஒன்று வந்துள்ளது.
அந்த கடிதத்தில் பெயர் குறிப்பிட விரும்பாத நபர், என்னுடைய தாத்தா மற்றும் தந்தை இந்த கிராமத்தில் தான் வசிந்து வந்தனர். இந்த கிராமம் எனக்கு மிகவும் நெருக்கமானது.
இதனால், இந்த கிராமத்தில் உள்ள எதாவது ஒரு தெருவிற்கு என்னுடைய தந்தையாரின் பெயர் வைத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று குறிப்பிட்டு, அந்த ஊரக சபையின் வங்கி கணக்கிற்கு 500,000 யூரோக்கள்(இலங்கை மதிப்பில் 11,46,94,000 கோடி ரூபாய்) அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அவர் கூறியது போன்றே, அந்த பணம் கடந்த டிசம்பர் 21-ஆம் திகதி(2021) வங்கி கணக்கில் ஏறியுள்ளது.
இது போன்ற ஒரு தொகை தங்கள் கிராமத்திற்கு கிடைப்பது முதல் முறை எனவும், இதை கிராமத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளதால், அந்த கிராமத்தின் தலைவர் கூறியுள்ளார்.
ஆனால், அவருடைய தந்தையின் பெயர் என்ன என்பது குறிப்பிடப்படவில்லை.