சீனாவின் வுஹான் ஆய்வகம் அமைய காரணமான பிரான்ஸ்: வெளிவரும் முக்கிய பின்னணி
சீனாவின் வுஹான் நகரில் உயிரியல் ஆய்வகம் அமைய காரணமாக பிரான்ஸ் பின்னர் அதன் செயல்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதை அமெரிக்க அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர்.
கொரோனா பரவலுக்கும் 4 ஆண்டுகள் முன்னரே, வுஹான் ஆய்வகம் தொடர்பில் பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2003 சார்ஸ் கிருமி பரவலை அடுத்து, 2004ல் வுஹான் ஆய்வகத்தில் ஒரு புதிய உயிரியல் பாதுகாப்பு ஆய்வகத்தை உருவாக்க பிரான்ஸ் மற்றும் சீனா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
புதிய ஆய்வகத்திற்கான வடிவமைப்பு, உயிரியல் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகள், பிரான்ஸ் தொழில்நுட்பம் என அனைத்தையும் பிரான்ஸ் முன்னெடுத்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 50 பிரெஞ்சு விஞ்ஞானிகள் வுஹான் ஆய்வகத்தில் பணியாற்றவிருக்கும் ஊழியர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளனர்.
ஆனால் நாளடைவில் சீனாவின் உண்மையான நோக்கம் தொடர்பில் கவலை தெரிவித்த பிரான்ஸ் விஞ்ஞானிகளை 2017ல் சீனா வெளியேற்றியுள்ளது.
இதன் பின்னர் 2018ல் இருந்து இந்த ஆய்வகம் உத்தியோகப்பூர்வமாக செயல்படத் தொடங்கியுள்ளது. மட்டுமின்றி, சீன ராணுவத்திற்காக உயிரியல் ஆயுதங்கள் தொடர்பில் 2017ல் இருந்தே வுஹான் ஆய்வகம் ஆய்வுகளை தொடங்கியுள்ளதாகவும் அமெரிக்கா கண்டறிந்துள்ளது.
2015ல் பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்த பின்னர், அமெரிக்காவும் வுஹான் ஆய்வகம் தொடர்பில் நிதியுதவி செய்வதை நிறுத்திக் கொண்டுள்ளது.
ஆனால் 2009 முதல் 2019 வரையில் அமெரிக்கா வுஹான் ஆய்வகத்திற்காக 1.1 மில்லியன் டொலர்கள் நிதியுதவி அளித்துள்ளது.
மேலும் வுஹான் ஆய்வகத்திற்காக அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்ட இன்னொரு 800,000 டொலர் நிதியுதவி தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது.
வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா கிருமிகள் கசியவில்லை என்றே சீனா தரப்பில் உறுதிபட தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.