போர் பதற்றம்... அந்த நாட்டுக்குச் செல்லவேண்டாம்: பிரான்ஸ் எச்சரிக்கை
இஸ்ரேல் ஹமாஸ் போர் காரணமாக, இன்னொரு நாடும் உலக அரங்கில் எதிர்மறையாக கவனம் ஈர்த்துவருகிறது.
அந்த நாடு லெபனான்...
ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய அக்டோபர் 7ஆம் திகதிக்குப் பிறகு, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலும் மோதல் நிகழ்ந்துள்ளது. இஸ்ரேல் லெபனானை தாக்கியதில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனானுக்குச் செல்லவேண்டாம்
ஆக, இஸ்ரேல் ஹமாஸ் பொரில் லெபனானும் தலையிட்டுள்ளதையடுத்து, பல நாடுகள் லெபனானுக்குச் செல்லவேண்டாம் என தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துவருகின்றன.
அவ்வகையில், பிரான்ஸ் நாடும், லெபனானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தன் குடிமக்களை எச்சரித்துள்ளது. பாதுகாப்பு நிலைமை பதட்டமாக இருப்பதால் சில விமான நிறுவனங்கள் விமானப்போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.
லெபனானில், குறிப்பாக லெபனானின் தெற்கு எல்லையில் பாதுகாப்பு தொடர்பில் பதற்றமான சுழல் நிலவுவதால், லெபனான் பயணத்துக்கு திட்டமிடும் பிரான்ஸ் மக்கள், அங்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |