நவம்பர் 2 முதல் பிரித்தானியாவுக்கு பதிலடி கொடுப்போம்! பிரான்ஸ் எச்சரிக்கை
நவம்பர் 2 ஆம் தேதி முதல் பிரித்தானியாவுக்கு பதிலடி கொடுக்க தொடங்குவோம் என பிரான்சின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் Clément Beaune எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து மீன்பிடி பகுதிகளை பிரிப்பது மிகவும் பிரச்சனைக்குரியதாக உள்ளது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் (பிரித்தானியா-பிரான்ஸ்) இடையிலான பிரெக்சிட்டிற்குப் பிந்தைய மீன்பிடி பிரச்சனையை தீர்க்காவிட்டால் பிரித்தனாயா மீது தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீன்பிடி பிரச்சனையை தீர்க்கப்படவில்லை என்றால், நவம்பர் 2 ஆம் திகதி முதல் பிரித்தானியாவுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை பாரிஸ் முன்னெடுக்க தொடங்கும் என்று பிரான்சின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் கிளெமென்ட் பியூன் எச்சரித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளில் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு முறையான சுங்க மற்றும் சுகாதார சோதனைகள் மற்றும் கடல் உணவுகளை தரையிறக்குவதற்கான தடை ஆகியவை அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், தடைகளின் முழு பட்டியல் அக்டோபர் 28 அன்று வெளியிடப்படும் என பிரான்சின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் Clément Beaune தெரிவித்துள்ளார்.