3000 புதிய வீடுகள்..!பாலஸ்தீனத்தை துண்டாக்கும் இஸ்ரேலின் E1 திட்டம்: பிரான்ஸ் கடும் கண்டனம்!
மேற்கு கரையில் புதிய வீடுகள் கட்டும் இஸ்ரேலின் திட்டத்திற்கு பிரான்ஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் புதிய வீடுகள் கட்டும் திட்டம்
ஜெருசலேம் நகரின் கிழக்கே சுமார் 3000-க்கும் மேற்பட்ட புதிய குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்கும் "மேற்கு E1"() திட்டத்திற்கு இஸ்ரேல் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய குடியிருப்பு கட்டிட திட்டம் செயல்படுத்தப்பட்டால் ரமல்லா மற்றும் பெத்லகேம் ஆகிய பாலஸ்தீன நகரங்களுக்கு இடையிலான இணைப்பை பாதிக்கும்.
அத்துடன் இது கிழக்கு ஜெருசலேமை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் இருந்து முழுவதுமாக பிரித்து விடும்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பேசப்பட்ட வந்த இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் தற்போது ஒப்புதல் அளித்திருப்பது சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரான்ஸ் கண்டனம்
இந்நிலையில் மேற்கு கரை பகுதியில் புதிய வீடுகள் கட்டும் இஸ்ரேலின் திட்டத்திற்கு பிரான்ஸ் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், புதிய வீடுகள் கட்டும் திட்டத்தை இஸ்ரேல் கைவிட வேண்டும், இது சர்வதேச சட்டத்தை மீறும் நடவடிக்கையாகும் என கண்டித்துள்ளது.
இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்தே பிரான்ஸின் இந்த கண்டன அறிக்கை வெளியாகியுள்ளது.
முன்னதாக பாலஸ்தீன தனிநாடு என்ற கருத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இந்த திட்டத்தின் நோக்கம் என நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் அலுவலகம் தகவல் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |